Get APP in 

நடிகர் தனுஷின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் 'மாரி 2' திரைப்படம் வெளியாகியது. இதனை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவர் 'தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற பிரெஞ்சு - ஆங்கில திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படம் தமிழில் 'பக்கிரி' என்ற தலைப்பில் வருகின்ற ஜூன் 21ம் தேதி வெளியாகவுள்ளதாக ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமித் திரிவேதி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார்.