Get APP in 

'அயோக்யா' படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இயக்குநர்

இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் 'அயோக்யா' திரைப்படம் வெளியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தனது உதவியாளர் வெங்கட் மோகனின் முதல் படத்தை பார்த்து பாராட்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினர்களுடன் வருகை தந்து படக்குழுவினர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்' படக்குழுவினர்களும் 'அயோக்யா' படத்தை பார்க்க வருகை தந்திருந்தனர்.