Get APP in 

தமன்னா, பிரபுதேவா நடிக்கும் 'காமோஷி’ படத்தின் டிரைலர் வெளியீடு

இயக்குநர் சக்ரி டோலெட்டி இயக்கத்தில், நயன்தாராவின் 'கொலையுதிர் காலம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'காமோஷி’ உருவாகியுள்ளது. நடிகை தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், பிரபுதேவா, பூமிகா சாவ்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபுதேவா, தமன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவி 2' படமும் மே 31ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'காமோஷி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

'காமோஷி’ டிரைலர் : https://www.youtube.com/watch?v=yyqYeWrtlgY