Get APP in 

'இரும்புத்திரை 2' படத்தின் நாயகி குறித்த தகவல்

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'இரும்புத்திரை'. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகியாக நடிகை ⭐சமந்தாவும், வில்லனாக நடிகர் அர்ஜுனும் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தாவிற்கு பதிலாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.