Get APP in 

தடைகளைத் தகர்த்து வெளிவருகிறது விஷாலின் 'அயோக்யா'

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'அயோக்யா'. மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், சனா கான், யோகி பாபு, ராகுல் தாத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதிப்பிரச்சனை காரணமாக 'அயோக்யா' படம் நேற்று வெளியாகவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளருக்கு ரூ.1 கோடி பணத்தை விஷால் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது.