Get APP in 

அதர்வாவின் '100' படத்திற்கான தடை நீக்கம்

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் '100'. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் நேற்று திரைக்கு வர இருந்தது ஆனால் சில காரணங்களால் படத்தினை திரையிடும் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் நேற்று வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தடை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து '100' திரைப்படம் இன்று முதல் திரைக்கு வரவுள்ளது.