Get APP in 

பக்கா மாஸ் குடும்ப படத்தில் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'எஸ்.கே 16' என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்த படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா, யோகி பாபு, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "உங்கள் தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, மாமா, மச்சான், அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பையன், மாமன் பொண்ணு, இந்த சொந்தங்களை மொத்தமாக திரையில் காண இன்று துவக்கம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படம் பக்கா மாஸ் குடும்ப படமாக உருவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular