Get APP in 

மீண்டும் இணையும் இளையராஜா - எஸ்.பி.பாலசும்ரமணியம் கூட்டணி

இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு 'இளையராஜா 75' என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டு ரசித்த இசை ரசிகர்களுக்கு அதில் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி போன்ற இளையராஜாவின் முக்கிய பாடகர்கள் பங்கேற்கவில்லை என்று வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில், இளையராஜாவின் பிறந்தநாளான வரும் ஜூன் 2ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி பங்கேற்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்பட பல முன்னணி பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.