Get APP in 

ப்ரியா பவானி சங்கர் பாலிவுட் படங்களில் நடிக்கலாம் - எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமாவில், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என்று பல திறமைகளை கொண்டிருப்பவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மான்ஸ்டர்' திரைப்படம் வருகின்ற 17ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில் "நடிகை ப்ரியா பவானி சங்கரிடம் அசாத்திய திறமை இருக்கிறது. அவர், பாலிவுட் படங்களில் நடிக்கலாம்" என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு தணிக்கை துறையினர் "யு" சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.