Get APP in 

நடிகர் விஷாலின் 'அயோக்யா' படத்தின் சென்சார் குறித்த தகவல்

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'அயோக்யா'. இந்த படத்தில் விஷால் - ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் 'அயோக்யா' திரைப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.