Get APP in 

விஜய் சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சிந்துபாத்’ உருவாகியுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் 'சங்கத்தமிழன்' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகிவருகிறது.