Get APP in 

'நீயா 2' படம் குறித்து இயக்குநர் எல்.சுரேஷ்

ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் படம் 'நீயா2'. பாம்பின் பழி வங்காலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் குறித்து இயக்குநர் எல்.சுரேஷ் கூறும்போது "பாம்பிற்காக நாங்கள் பல இடங்களில் தேடி அலைந்து இறுதியாக பாங்காக்கில் உள்ள கோப்ரா வில்லேஜ் என்ற இடத்தில் உள்ள பாம்பைத்தான் தேர்வு செய்தோம். முதலில் நிஜ பாம்பை வைத்து எடுக்கத்தான் முடிவு செய்தோம். ஆனால், அங்குள்ள பாம்பிற்கு ஒரு வார காலம் தான் நிஜ உருவம் இருக்கும். அதற்கு மேல் தோல் உரிவதும் வளர்வதுமாக இருப்பதால் படப்பிடிப்பிற்கு உகந்ததாக இருக்காது என்று கிராபிக்ஸ் செய்ய முடிவெடுத்தோம்" என்று அவர் கூறினார்.