Get APP in 

'சுட்டுப் பிடிக்க உத்தரவு' படத்தின் சென்சார் குறித்த தகவல்

இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் நடிகர் விக்ராந்த், இயக்குநர் மிஷ்கின் மற்றும் இயக்குநர் சுசீந்திரன் நடித்து வரும் படம் 'சுட்டுப் பிடிக்க உத்தரவு'. இந்த படத்தில் நாயகியாக நடிகை அதுல்யா ரவி நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகியது. மேலும் இந்த படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியது. இந்நிலையில், இந்த படத்திற்கு தணிக்கை துறையினர் "U/A" சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.