Get APP in 

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் அமலா பால்

இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான முதற்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நயன்தாரா, அனுஷ்காவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ?கூறப்படுகிறது.